ஹெச். வினோத் - விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன், ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமான முறையில் மலேசியாவில் நடைபெற்று முடிந்தது.
அடுத்ததாக இப்படத்தின் டிரைலர் எப்போது வெளிவரும் என்றுதான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், முன்பதிவில் ஜனநாயகன் படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவில் இப்படம் ரூ. 7.5 கோடி வசூல் செய்துள்ளது.


