கவுண்டமணி இரட்டை வேடத்தில் நடித்த படத்தின் படப்பிடிப்பு குறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மனம் திறந்துள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான பல படங்களில் கமர்ஷியல் ரீதியாக மிகப்பெரிய ஹிட்டான படத்தில் ‘நாட்டாமை’ திரைப்படமும் ஒன்று. இந்த படத்தில் சரத்குமார், விஜயகுமார், மனோரமா, கவுண்டமணி, செந்தில் என பல நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். இப்படம் இன்றும் பலரது எவர் கிரீன் படமாக உள்ளது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் பலரது ஃபேவரைட் லிஸ்டில் தற்போதும் உள்ளது.
‘நாட்டாமை’ படத்தில் யானைகள் போரடிக்கும் காட்சி ஒன்று இருக்கும். அதற்கு ஐந்து யானைகளை அப்போது கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்த சேரன் கேரளா சென்று கொண்டு வந்திருப்பார். இந்த யானைகள் ஐந்து லாரிகள் கொண்டுவரப்பட்டதாக இயக்குனர் சேரன் பல நேர்காணல்களில் கூறியிருப்பார். ‘நாட்டாமை’ படத்தில் கவுண்டமணி - செந்தில் காமெடிகள் மிகவும் அல்டிமேட்டாக இருக்கும்.
இப்போது பார்த்தாலும் அந்த காமெடிகள் சிரிப்பை வரவழைக்கும். இப்படி கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படங்களில் ‘நாட்டாமை’ திரைப்படமும் ஒன் ஆஃதி பெஸ்ட் படமாக உள்ளது. இந்நிலையில், ‘நாட்டாமை’ திரைப்படத்தில் கவுண்டமணி கதாபாத்திரம் குறித்து கே.எஸ்.ரவிக்குமார் மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, “கவுண்டமணி சார் கதை எல்லாம் கேட்கமாட்டார். ஏய் ரவி நீ சூப்பரா பண்ணிருவ என்பார்.
’நாட்டாமை’ படத்தின் ஷூட்டிங்கிற்கு அவரிடம் மூன்று நாட்கள் மட்டும் தான் கால்ஷீட் வாங்கினேன். அவர் எத்தனை நாட்கள் ஷூட்டிங் வந்திருக்கிறாரோ அத்தனை நாட்களுக்கு தான் சம்பளம் கொடுப்போம். அந்த மூன்று நாட்களில் கவுண்டமணியின் இரட்டை வேட காட்சிகள் எல்லாம் எடுத்தோம். அதை பார்த்த கவுண்டமணி என்ன ரவி மூன்று நாட்களில் இரட்டை வேட காட்சிகள் எல்லாம் எடுத்துவிட்டாய். இனி உன் படத்தில் நடித்தால் டே சம்பளம் கிடையாது. படத்திற்கு தான் சம்பளம் வாங்குவேன் என்றார். ‘நாட்டாமை’ படத்தில் முக்கியமான சீன் எல்லாவற்றிலும் கவுண்டமணி இருப்பார். ஒவ்வொரு சீன்களிலும் கேட்பார் இது எதற்கு என்று, படம் பாருங்கள் தெரியும் என்பேன்” என்றார்.
தேன்மொழி


