TamilsGuide

60 வயதான இந்திய பெண் கிரீன் கார்டு பெற சென்றபோது கைது

அமெரிக்காவில் வசித்து வரும் 60 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த பாபில்ஜித் "பப்ளி" கவுர், தனது கிரீன் கார்டு விண்ணப்பத்திற்கான பயோமெட்ரிக் ஸ்கேன் சந்திப்பின்போது குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய பெண் 1994 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது. அமெரிக்க குடிமக்களாக இருக்கும் அவரது குழந்தைகள் மூலம் கிரீன் கார்டு மனு ஏற்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 1 ஆம் தேதி ICE அலுவலகத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பிறகு, பல மணி நேரம் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படாமல், கவுர் அடெலாண்டோ என்ற ICE தடுப்புக் காவல் மையத்திற்கு மாற்றப்பட்டார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக லாங் பீச் பகுதியில் உணவகம் நடத்தி, அப்பகுதி சமூகத்துடன் இணைந்திருந்த கவுரின் திடீர் கைது, அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது

. இதுகுறித்து அவரது மகள் ஜோதி வேதனை தெரிவித்துள்ளார். லாங் பீச் நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் கார்சியா, கவுரை விடுவிக்க கோரி கூட்டாட்சி அதிகாரிகளுடன் பேசி வருகிறார்.

கைதான பெண்ணின் குடும்பத்தினர் ஜாமின் மனு தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர்.

Leave a comment

Comment