TamilsGuide

மகிழவெட்டுவான்கிராமத்திற்குள் நுழைந்த 20 மேற்பட்ட காட்டு யானைகள் 

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம் பிரதேசங்களில் பல நாட்களாக காட்டு யானைகள் பிரச்சினை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனால் பயிர் தரும் மரங்கள் பல அளித்துள்ளதோடு , இப் பிரதேச மக்களும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் ( 27 ) மாலை வேளையில் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய வெல்லாவெளி பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும் , மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும் இணைந்து எடுத்த முயற்சியின் பலனாக பல்வேறு பிரேயத்தனங்களுக்கு மத்தியில் பாதுகாப்பாக காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment