TamilsGuide

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆப்கானிஸ்தான் சிறுவர்கள்

இங்கிலாந்தின் மேற்கு மிட்லேண்ட்ஸ் மாகாணத்தில் உள்ள வார்விக்‌ஷெரி பகுதியில் கடந்த மே மாதம் 15 வயது சிறுமி ஒருவர் அருகிலுள்ள பூங்காவுக்கு சென்றுள்ளார்.

அப்போது மதுபோதையில் இருந்த அந்த சிறுமியை இரண்டு சிறுவர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

விசாரணைகளின் முடிவில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஜன் ஜஹன்பெஸ் (17) மற்றும் நைசல் (17) எனும் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு வார்விக்‌ஷெரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பின் படி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஜன் ஜஹன்பெசுக்கு 10 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறைத் தண்டனையும், நைசலுக்கு 9 ஆண்டுகள் 10 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment