கடந்த சில வாரங்களாகவே தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்டு வரும் விஷயம் விஜய்யின் ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழா பற்றி தான்.
ஏற்கெனவே ஜனநாயகத்துடன் விஜய் நடிக்கப்போவதில்லை என்பதால் ரசிகர்கள் படத்தை கண்டிப்பாக திரையரங்கில் பார்த்தே ஆக வேண்டும் என பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
இதில் இன்னும் எதிர்ப்பார்ப்பை ஏற்றும் அளவிற்கு விஜய்யின் பட ஆடியோ வெளியீட்டு விழா முதன்முறையாக வெளிநாட்டில் நடக்கிறது. ஜனநாயகன் படத்தின் இசை கச்சேரி தற்போது நடந்துவரும் நிலையில் இசை வெளியீட்டு விழா 6 மணிக்கு மேல் தொடங்கவுள்ளது.
நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் கோட் சூட்டில் மாஸாக வந்துள்ளார்.
விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? | Vijay Jananayagan Audio Launch Telecast Update
இசை வெளியீட்டு பிரம்மாண்டத்தின் உச்சமாக நடைபெற்று வரும் நிலையில் தொலைக்காட்சியில் எப்போது வரும் என ரசிகர்கள் இப்போதே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா உரிமையை ஜீ தமிழ் வாங்கியுள்ளார்களாம். இதனால் இசை வெளியீட்டு விழாவை வருகிற ஜனவரி 3 மற்றும் 4 தேதியில் ஜனநாயகன் நிகழ்ச்சியை ஜீ தமிழில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்களாம்.


