TamilsGuide

மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் - வரலாறு படைத்த ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று கோலாகலமாக தொடங்கியது.

இந்த விழாவில் படத்தில் நடித்து உள்ள நடிகர்கள், நடிகைகள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். 80 ஆயிரம் இருக்கைகள் கொண்ட புக்கிட் ஜலில் மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிலையில் மலேசியாவில் அதிகம் பேர் கலந்துகொண்ட இசை வெளியீட்டு விழா என மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்பிடித்து 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா வரலாறு படைத்துள்ளது.
 

Leave a comment

Comment