நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக இன்று நடைபெற்றது. இதில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் ஜன நாயகன் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஹெச்.வினோத் பேசியதாவது:
ஜனநாயகன் படத்தின் கடைசி 20 நிமிடங்களில், விஜய் சாருடைய பேர்வல் வீடியோ இருக்கிறது. அழவைக்க போகிறோம் என சிலர் சொல்கிறார்கள்.
அதெல்லாம் எதுவும் இல்லை. படத்தின் முடிவில் நம்பிக்கை மட்டும்தான் இருக்கிறது. ஏன் என்றால் தளபதிக்கு என்ட்-டே கிடையாது, பிகினிங் மட்டும்தான். ரெண்டே விஷயம் சொல்லி முடித்துக்கொள்கிறேன்.
ஜனநாயகன் எப்படி இருக்கும் என நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கிறது. ஒரு ரீமேக் படமாக இருக்குமா? இல்லை கொஞ்சம்தான் ரீமேக்கா என்ற குழப்பம் இருக்கிறது.
ஒன்று மட்டும் சொல்கிறேன். ஐயா இது தளபதி படம். அதனால் உங்கள் மைண்டில் இருக்கும் டவுட் எல்லாத்தையும் அழித்துவிட்டு வாருங்கள். இது 100 சதவீதம் பொழுதுபோக்கான படம் என தெரிவித்தார்.


