TamilsGuide

அவதார் 3 இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு - பாக்ஸ் ஆபிஸ் விவரம் 

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூம் இயக்கத்தில் உருவாகி 2009ஆம் ஆண்டு வெளிவந்த படம் அவதார். இப்படம் 2.9 பில்லியன் வசூல் செய்தது.

இப்படத்தை தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு அவதார் 2 வெளிவந்து 2.3 பில்லியன் வசூல் ஈட்டியது. இந்த நிலையில், இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து வெளிவந்துள்ள படம்தான் அவதார்: Fire and Ash.

இப்படத்தில் Zoe Saldaña, Sam Worthington, Oona Chaplin உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனால் இப்படத்தின் வசூலும் சற்று சரிவை சந்தித்துள்ளது.

இந்த நிலையில், அவதார் 3 திரைப்படம் உலகளவில் ரூ. 5500 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Leave a comment

Comment