• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுந்தர் சி Next Loading... ஹிண்ட் கொடுத்த நிறுவனம்

சினிமா

கடந்த 2004-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சி. மற்றும் அவருடைய மனைவியும் நடிகையுமான குஷ்பு ஆகியோர் இணைந்து தொடங்கப்பட்ட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் அவ்னி சினிமேக்ஸ். சுந்தர் சி. இயக்கும் படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில், அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தற்போது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதாவது, இது ஒரு முக்கியமான மெசேஜ்... உங்க சார்ஜர்ல இருக்கிற ஹோல்ல இருந்து படிங்க... என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் சுந்தர் சி-யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு, தமன்னா மீண்டும் நடிக்க வருகிறார் என பல்வேறு யூகங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படத்தின் படி அது Sundar C's Next Loading என தெரியவருகிறது.

முன்னதாக, கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. சில நாட்களில் தவிர்க்க முடியாத காரணங்களில் அப்படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி தெரிவித்தார். இதனால் இது அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. 
 

Leave a Reply