TamilsGuide

யாழ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அர்ச்சுனா , சிறீதரன் கடும் வாக்குவாதம்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கும் இடையே யாழ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே இவ்வாறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்  “குட்டி நாயை போன்று குரைத்துக்கொண்டு இருக்கக் கூடாது என கருத்தொன்றை பதிவு செய்திருந்தார்.

இதன்போது குறுக்கிட்ட அர்ச்சுனா, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான இளங்குமரனை பார்த்து எவ்வாறு நாய் என கூறமுடியும்? என கேள்வி எழுப்பினார்.

மேலும் கைநாட்டு அரசியலை செய்யும் தமிழரசுக் கட்சியின் அரசியல்வாதிகளுக்கு இவ்வாறான செயற்பாடுகள் தெரிவதில்லை என விமர்சித்திருந்தார்.
 

Leave a comment

Comment