TamilsGuide

முதல் படம் படுதோல்வி, 30 ஆண்டுக்கு பின் அதே கதையை படமாக்கி வெற்றி கண்ட ஏ.வி.எம். - நடிப்பில் அசத்திய மனோரமா

ஏ.வி.எம். சரவணன் குறித்து பலரும் தங்கள் நினைவுகளை கூறி வரும் நிலையில், அவரது பழைய வீடியோக்களும் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா என்றாலே உடனடியாக நினைவுக்கு வருவது ஏ.வி.எம். ஸ்டூடியோ தான். இதற்கு முழு விளக்கம் ஏ.வி.மெய்யப்பன் என்பது தான். ஏ.வி.எம். சரவணனின் அப்பா தான் இந்த மெய்யப்பன். காரைக்குடியை சேர்ந்த இவர், முதலில் நண்பர்களுடன் இணைந்து பிரகதி ஸடூடியோ என்ற பெயரில் படங்களை தயாரித்து வந்துள்ளார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் தனியாக ஸ்டுடியோ தொடங்கிய இவர், அதற்கு தனது பெயரான ஏ.வி.எம். என்று வைத்துள்ளார்.

1945-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏ.வி.எம். ஸ்டூடியோ தயாரித்த முதல் படம் 1947-ம் ஆண்டு வெளியான நாம் இருவர். இந்த படத்தை தயாரித்தது மட்டும் இல்லாமல், இந்த படத்தின் இயக்குனராகவும் ஏ.வி.மெய்யப்பன் இருந்துள்ளார். அதன்பிறகு பல வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம், கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு இதுவும் கடந்து போகும் என்ற படத்தை தயாரித்திருந்தது. அதன்பிறகு கடந்த 11 வருடங்களாக பட தயாரிப்பு பணிகளில் ஈடுபடவில்லை.

அதே சமயம் ஏ.வி.எம். ஸ்டூடியோ மற்றும் கார்டனில் பல படங்களில் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த டிசம்பர் 3-ந் தேதி பிறந்த நாள் கொண்டாடிய ஏ.வி.எம். சரவணன், டிசம்பர் 4-ந் தேதி மரணமடைந்தார். அவரது மரணம், தமிழ் சினிமாவில் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏ.வி.எம். சரவணன் குறித்து பலரும் தங்கள் நினைவுகளை கூறி வரும் நிலையில், அவரது பழைய வீடியோக்களும் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது முதல் படம் தோல்வியை சந்தித்த நிலையில், அதே கதையை 30 ஆண்டுகளுக்கு பிறகு படமாக்கி வெற்றி கண்டுள்ளார். 1959-ம் ஆண்டு வெளியான படம் மாமியார் மெச்சிய மருமகள். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான இந்த படம் தான் ஏ.வி.எம். சரவணன் தயாரிப்பாளராக அறிமுகமான முதல் படம். எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம், வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படம் தோல்விப்படமாக அமைந்தது. தான் தயாரித்த முதல் படமே இப்படி தோல்வியாக அமைந்துவிட்டதே என ஏ.வி.எம்.சரவணன் வருத்தமாக இருந்துள்ளார்.

அதன்பிறகு பல வெற்றிப்படங்களை தயாரித்த அவர், 30 ஆண்டுகள் கழித்து, மீண்டும் மாமியார் மெச்சிய மருமகள் கதையை சிறிது மாற்றம் செய்து பாட்டி, பேரன் செண்டிமெண்ட் கதையாக மாற்றி எடுத்துள்ளார். ராஜசேகரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பாண்டியராஜன், ஊர்வசி, மனோரமா, எஸ்.எஸ்.சந்திரன், ஆகியோர் நடித்திருந்தனர். மேலும், இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் சூப்பர் கார் ஒன்றை அறிமுகம் செய்து அசத்தியிருந்தனர். இந்த படத்தின் 100-வது நாளில், இந்த கார் தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டது.

தோல்வியை சந்தித்த ஒரு கதையை சிறிது மாற்றம் செய்து 30 ஆண்டுகளுக்கு பின் பெரிற வெற்றிப்படமாக மாற்றியவர் தான் ஏ.வி.எம்.சரவணன். 30 ஆண்டுக்கு பின் வெளியான அந்த படம் பாண்டியராஜன் நடித்த பாட்டி சொல்லை தட்டாதே திரைப்படமாகும்.

Rukmani Palaniappan

Leave a comment

Comment