TamilsGuide

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் ஆராதனை நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல கிறிஸ்தவ தேவ ஆலயங்களிலும் விசேட நத்தார் வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்த நிலையில் மட்டக்களப்பு சியோன் தேவாலய பிரதான கிறிஸ்மஸ் ஆராதனை தேவாலய பிரதான போதகர் ரோஷன் மகேசன் தலைமையில் இடம்பெற்றது.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விசேட பிரார்த்தனைகளும் இதன்போது இடம்பெற்றது. 

இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிறிஸ்மஸ் பண்டிகை எளிமையான முறையில் முன்னெடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டி வழிபாடுகளில் கிறிஸ்தவ மக்கள் ஈடுபட்டனர்.
 

Leave a comment

Comment