TamilsGuide

நியூசிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் மக்கள் 

உலகின் கிழக்கு முனையில் அமைந்துள்ள கிரிபட்டி தீவுகள், அமெரிக்காவின் சமோவா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

அமைதியின் செய்தியை உலகிற்குக் கொண்டு வந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூர்ந்து, அந்த நாடுகளில் தற்போது கிறிஸ்துமஸ் விசேட திருப்பலிகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், இலங்கை உட்பட உலகின் ஏனைய நாடுகளும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்பதற்கு தயாராகவுள்ளன.  
 

Leave a comment

Comment