• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாலஸ்தீன ஆதரவு போராட்டத்துக்கு ஆதரவு - கிரெட்டா தன்பெர்க் கைது

இங்கிலாந்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாலஸ்தீன ஆக்சன் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக கூறி அந்நாட்டு அரசு தடை செய்தது.

இதற்கிடையே, நாடு முழுவதும் நடந்த முந்தைய போராட்டங்கள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் விசாரணைக்காக காத்திருக்கும் நிலையில், ஜாமீன் இன்றி தடுத்து வைக்கப்பட்டதைக் கண்டித்து பாலஸ்தீன ஆக்சன் அமைப்பைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் 52 நாட்களாக பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரிக்கும் பதாகையை கைகளில் வைத்திருந்ததற்காக கிரெட்டா தன்பெர்க் லண்டனில் கைது செய்யப்பட்டார்.

'பிரிசனர்ஸ் ஃபார் பாலஸ்தீன்' என்ற போராட்டக் குழுவானது கிரெட்டா பதாகை வைத்திருக்கும் புகைப்படத்தை ஊடகங்களில் பகிர்ந்தது.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிரெட்டா தன்பெர்க் ஒரு இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர். காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்காக உலகம் முழுவதும் அறியப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply