கனடாவில் தமிழர்களால் நிர்வகிக்கப்பெறும் வீடு விற்பனை முகவர் நிறுவனங்களில் நன்கு அறியப்பெற்ற ஒன்றாக விளங்கும் RE/MAX Ace Realty Inc. Brokerage நிறுவனம் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடத்திய வருடாந்த விற்பனை விருதுகள் வழங்கும் வைபவத்தில் நூற்றுக்கணக்கான வீடு விற்;பனைப் பிரதிநிதிகள் மற்றும் முகவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
நிறுவனத்தின் பங்காளர்களில் திருவாளர்கள்
ஶ்ரீ நடராஜசுந்தரம்-விஜேய் செல்வநாயகம்- செல்வன் காசிப்பிள்ளை மற்றும் வாகீசன் ஜெயவீரசிங்கம் ஆகியோர் தங்கள் அலுவலப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களோடு இணைந்து விருதுகள் வழங்கும் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செயதிருந்தார்கள்.
ஸ்காபுறோவில் உள்ள பிரைட்டன் கொக்வென்சன் சென்றர் மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி வைபவத்திறகு பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றி அனைவரையும் பாராட்டிச் சென்றார்.
விற்;பனை விருதுகளைப் பெற்ற பல முகவர்கள் மேடையில் தங்களுக்குரிய வெற்றியாளர் விருதுகளைப் பெற்றுச் சென்றனர்.
மேற்படி விழாவில் முக்கிய அம்சமாகவும் போற்றக்கூடிய ஒரு சமூகப் பணியாகவும் குறிப்பிடக்கூடியதாக ஸ்காபுறோவில் மிக விரைவில் அமையவுள்ள 'தமிழர் சமூக மையத்தின்' கட்டட நிதிக்காக சுமார் 20 வீடு விற்பனை முகவர்கள் தலா 10 ஆயிரம் டாலர்கள் வீதம் வழங்கி தங்கள்
சமூகத்திற்கும் RE/MAX Ace Realty Inc. Brokerage நிறுவனத்திற்கும் பெருமையைச் சேர்த்துக் கொண்டார்கள்.
தமிழர சமூக மையத்திற்குரிய நிதி அன்பளிப்புக்களை அதன் சார்பில் சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.




---செய்தி; சத்தியன்


