TamilsGuide

போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தது

தெற்கு கடல் பகுதியில் போதைப்பொருளுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகு டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று காலை 6.00 மணியளவில் அந்தக் கப்பல் மீன்பிடித் துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

பல நாள் மீன்பிடிப் பயணத்தில் ஈடுபட்ட ஐந்து பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த படகில் இருந்து மீட்கப்பட்ட 11 பொதிகளில் இருந்த போதைப்பொருட்கள் ஐஸ் மற்றும் ஹெரோயின் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

ஆரம்பக் கட்ட விசாரணையில் இந்தப் படகு கந்தர கடற்றெழில் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது என்பதும் தெரிய வந்துள்ளது.

போதைப்பொருள் கையிருப்பின் அளவு மற்றும் அதன் பெறுமதி இன்னும் கணக்கிடப்படவில்லை.
 

Leave a comment

Comment