TamilsGuide

பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார் அர்ச்சுனா எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார்.

கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்றையதினம்(24.12.2025) சரணடைந்துள்ளார்.
பொலிஸில் சரண்

குறித்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இதனையடுத்து அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a comment

Comment