வாழ்க மகான் எம்ஜிஆர் புகழ்…!
சினிமா
அந்த காலகட்டத்தில்,
இந்திய நாட்டின் பிரதமர்
அன்னை இந்திரா காந்தி அவர்கள்
மதுரை நிகழ்ச்சி ஒன்றில்
கலந்துகொள்ள வந்திருந்தார்.
அவரை நேரில் சந்தித்து
ஒரு மனு அளிக்க வேண்டும் என்ற நோக்கில்
வாத்தியார் எம்ஜிஆர் அவர்கள்
மதுரை செல்ல முடிவு செய்தார்.
அது திருப்பரங்குன்றம் கூட்டம் நடைபெறும் காலம்…
திமுகவுடன் அரசியல் மோதல்
தீவிரமாக ஆரம்பித்திருந்த நேரம்.
சென்னையிலிருந்து மதுரை செல்லும்
ரயிலில் பயணத்தைத் தொடங்கினார் வாத்தியார்.
ஆனால் வழி முழுவதும்
ஒவ்வொரு ரயில் நிலையத்திலும்
அடங்காத மக்கள் வெள்ளம்…!
உலக ரயில்வே வரலாற்றிலேயே
இப்படி ஒரு ரயில்
பல மணி நேரம் தாமதமான
நிகழ்வு இதற்கு முன் இல்லை…
இனியும் இருக்காது!
திண்டுக்கல் ரயில் நிலையத்தில்,
“இங்கிருந்து தனி காரில்
மதுரை செல்லலாம்” என்று
வாத்தியார் முடிவு செய்தார்.
அன்னை இந்திராவை
நேரத்திற்குள் சந்திக்கவே அந்த முயற்சி.
ஆனால் அங்கிருந்த
ரயில்வே உயர் அதிகாரிகள்,
“ஐயா, தயவு செய்து
இந்த முடிவை மாற்றிக்கொள்ளுங்கள்…
அடுத்தடுத்த நிலையங்களில்
உங்களைப் பார்க்க
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு
மக்கள் கூட்டம் காத்திருக்கிறது.
நீங்கள் ரயிலில் இல்லை என்று தெரிந்தால்
அசம்பாவிதம் ஏற்படலாம்”
என்று எச்சரித்தனர்.
அதனால் மீண்டும்
ரயிலிலேயே பயணித்து
மதுரை சென்றார் வாத்தியார்.
இதற்குள்
அன்னை இந்திரா அவர்கள்
நிகழ்ச்சியை முடித்துவிட்டு
புறப்பட்டுவிட்டதால்
மனு கொடுக்க முடியவில்லை.
பின்னர் நேரடியாக
டெல்லிக்குச் சென்று
அங்கு மனுவை அளித்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து,
இந்தியாவின் ஆங்கிலம், ஹிந்தி
மற்றும் பல மொழி நாளிதழ்கள்
“Railway History-யில்
இது ஒரு அபூர்வமான நிகழ்வு”
என்று வாத்தியார் பயணத்தை
தலைப்புச் செய்தியாக வெளியிட்டன.
அன்றுதான்,
வாத்தியார் எம்ஜிஆர் அவர்களின்
மக்கள் செல்வாக்கை
முழுமையாக புரிந்துகொண்டார்
அன்னை இந்திரா காந்தி.
அப்போதும்…
இப்போதும்…
பல புதிய நடிகர்களுக்கு
கூட்டம் வருவது இயல்பே.
ஆனால்,
யார் நிலைத்து நிற்கிறார்
என்பதே
காலத்தின் உண்மையான பெருமை.
வாழ்க
மகான் எம்ஜிஆர் புகழ்…!
Rubath






















