TamilsGuide

நடிகர் சூர்யாவின் புதிய லுக்.. 

சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் கருப்பு. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து சூர்யா 46 மற்றும் 47 ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார் சூர்யா. இதில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடையப்போகிறது.

சமீபத்தில் சூர்யா 47 படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா, நஸ்லன் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சூர்யா 47 திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா புதிய கெட்டப்பிற்கு மாறியுள்ளார். அந்த கெட்டபின் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment