• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரபல வீடியோ கேமை உருவாக்கிய வின்ஸ் ஜாம்பெல்லா கார் விபத்தில் பலி

உலகில் அதிகம் விற்பனையாகும் கால் ஆப் டூட்டி போன்ற வீடியோ கேம்களை உருவாக்கியவர்களில் ஒருவர் வின்ஸ் ஜாம்பெல்லா (55).

இவர் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தக் கார் திடீரென விபத்தில் சிக்கிய ஜாம்பெல்லா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடன் பயணித்த மற்றொருவரும் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஜாம்பெல்லா மெடல் ஆப் ஹானர் உள்ளிட்ட கேம்களை தயாரித்து உலகப் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply