யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல தியேட்டருக்கு இரவில் குடும்பத்துடன் படம் பார்க்க சென்றவர்கள் இடை நடுவில் திரும்பி வந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர். யாழில் அண்மைகாலமாக இளையோர்கள் வழிமாறி , தகாத செயல்களில் ஈடுபடுவதுடன், குற்றச் செயல்களும் அதிகரித்த வண்னமே உள்ளது.
பெருமைக்கும் பண்பாட்டிற்கும் பெயர் போன யாழ்ப்பாணத்தில் தற்போது நிலமை தலைகீழாக சென்றுகொண்டிருக்கின்றது. போதைபொருள் பழக்கம் , பாடசாலை மாணவர்கள் முதல் பழக்கி விடப்பட்டுள்ளமை வேதனைக்குரிய விடயம் ஆகும்.
பொலிஸாரின் கைதுகள் இந்த சம்பவங்களை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. இது இவ்வாறிருக்க யாழ் பிரபல் தியேட்டரில் இரவில் படம்பாக்க சென்ற குடும்பம் ஒன்று அங்கு இருந்த இளைஞர்கள் சிலர் குடித்து கூத்தடித்த சம்பவத்தால் அதிர்ந்து போனதாக கூறப்படுகின்றது.
பொதுவாக மது அருந்துவதற்கு தடையுள்ளது. இந்நிலையில் அங்கிருந்த இளைஞர்கள் குடித்ததோடு மட்டும் நின்றுவிடாது , தகாத வார்த்தை பிரயோகங்களையும் உபயோகித்ததாக கூறப்படுகின்றது.
தியேட்டரின் இருக்கைகளில் போத்தில்கள் உருகிடக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பில் சபந்தபட்ட தியேட்டர் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குடும்பங்கள் அச்சமின்றி திரைப்படம் பார்க்க அங்கு செல்ல முடியும் என சமூகவலைத்தளவாசிகள் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.


