TamilsGuide

கனடிய தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனமான தமிழ்வண் தனது 20வது ஆண்டு நிறைவு விழா

கனடிய தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனமான 'தமிழ்வண்' தனது 20வது ஆண்டு நிறைவு விழாவை நேர்த்தியான முறையிலும் மனித நேயத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்திருந்தது!!
-------------------------------------------------------------------
கனடாவில் நன்கு அறியப்பெற்ற தமிழ்த் தொலைக் காட்சி நிறுவனமாகவும் அர்ப்பணிப்புள்ள ஒரு ஊடகமாகவும் விளங்கும் 'தமிழ்வண்' தனது 20வது ஆண்டு நிறைவு விழாவை நேர்த்தியான முறையிலும் மனித நேயத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்திருந்தது!!

கடந்த20-12-2025 அன்று சனிக்கிழமை மாலை ஸ்காபுறோவில் அமைந்துள்ள மெற்றொபொலிட்டன் விழா மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி விழாவை SV M EDIA. VANAKKAM TV ஆகிய சகோதர இலத்திரனியல் ஊடகங்கள் இணைந்து நடத்தின.

தமிழ்வண்'' அதிபர் ஶ்ரீ அவர்களின் தலைமையில் அர்ப்பணிப்புடன் இயங்கிவரும் இந்த ஊடகத்தின் தற்போது இரண்டு தூண்களாக விளங்கும் பிரசாந்த் மற்றும் தனராஜ் ஆகியோர் தாயகத்திலும் ஊடக நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்துடன் கனடாவில் கால் பதித்த நாட்தொடக்கம் தொடர்ச்சியாக தமிழ் வண் தொலைகாட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

அவர் இருவரும் பிரதான தொகுப்பாளர்களாக விழா மேடையில் தோன்றினார்கள்.

அழைக்கப்பெற்ற அரசியல் பிரமுகர்களாக மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியின் மாகாண அரசின் உறுப்பினராக உள்ள லோகன் கணபதி அவர்களும் பிக்கரிங் தொகுதியின் கனடிய பாராளுமன்ற உறுப்பினராக உள்ள யுனிற்றா நாதன் அவர்களும் கலந்து கொண்டு ர்ப்பணிப்புள்ள ஒரு ஊடகமாகவும் விளங்கும் 'தமிழ்வண்' தனது 20வது ஆண்டு நிறைவு விழாவிற்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். அத்துடன் மிகவும் நீண்ட நேரம் விழா மண்டபத்தில் அமர்ந்திருந்து அனைவரோடு உரையாடியாடி மேடையில் கௌரவிக்கப்பெற்ற கொடையாளர்களையும் கௌரவித்தார்கள்.

நூற்றுக்கணக்கான வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அங்கு கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள்.

தமிழ் வண் தொலைக்காட்சியின் ஆலோசகர் சாமி அப்பாத்துரை அவர்களும் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் அரிகரன் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.

அன்றைய மேடையில் பல கொடையாளர்கள் மற்றும் மனித நேயப் பணிகளில் ஈடுபாடு கொண்டவர்கள் என பலர் அடையாளப்படுத்தப்பெற்றனர். அவர்களில் பலர் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தாயகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களின் கல்விக்கான செலவுகளை அனுப்பி அவர்கள் தங்கள் கல்வியில் உயரும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பவர்களாக விளங்குகின்றார்கள்.
மேலும் அற்புதமான கலைப் படைப்புக்கள் அங்கு மேடையேறி சபையோரை மகிழ்வித்தும் உற்சாகப் படுத்தியும் பாராட்டுக்களைப் பெற்றன.

மனித நேயப் பணிகளை ஆற்றும் அன்பர்களையும் அவர்களது நிறுவனங்களையும் நாம் அனைவரும் வணங்கவேண்டும் என்று உதயன் பிரதம ஆசிரியர் தனது சிறப்புரையில் குறிப்பிட்டிருந்தது கனவிக்கத்தக்கது.

மேலும், ஸ்காபுறோவில் அமையவுள்ள 'தமிழர் சமூக மையம்' நிறுவப்பெறுவதற்கான நிதி அன்பளிப்பாக சுமார் 40 ஆயிரம் டாலர்களை சில தனி நபர்களும் வர்த்தக நிறுவனங்களும் வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நிறைவாக, மேற்படி கனடிய தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனமான 'தமிழ்வண்' தனது 20வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் இந்த காலப்பகுதியில் அவர்களது ஊடக நிறுவனம் எவ்வித தொய்வும் இன்றி சிறப்பாக இயங்க தங்கள் ஆதரவை எமது தமிழ்ச் சமூகம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல அன்பர்களால் விடுக்கப்பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

----- SATHIYAN---

Leave a comment

Comment