மக்கள் திலகம் எம்ஜிஆர்."நாடோடி மன்னன்" படத்துக்கு கவியரசு கண்ணதாசனுடன் எம்ஜிஆர் பிக்சர்ஸ் ரவீந்தரும் சேர்ந்து வசனம் எழுதினார். பணிச்சுமையிலிருந்த கண்ணதாசன் ஒரு பதினெட்டு காட்சிகளுக்கு மட்டுமே வசனம் எழுதியிருந்தார் எந்த வசனம் யார் எழுதினது என்று தெரியாது. எப்படியும் முக்கிய காட்சிகளுக்கு கண்ணதாசன் தான் வசனம் எழுதிருப்பார். ஒரு காட்சியில் எம்.என். ராஜத்திடம் நான் உன் கணவரல்ல என்று மன்னராக நடித்து கொண்டிருக்கும் நாடோடியான மக்கள் திலகம் உண்மையை விளக்குவார். எம்.என்.ராஜமும் உண்மையை புரிஞ்சுப்பார். அப்போது, மக்கள் திலகம், ‘உண்மையிலயே என்னை நம்புகிறாயா சகோதரி?’ என்று கேட்பார்.
அதற்கு, அந்த காலகட்டத்தில் பொடிவைத்து எம்.என். ராஜம் பதில் சொல்லும் இந்த வசனத்தை நிச்சயம் கண்ணதாசன் தான் எழுதியிருப்பார். எம்.என். ராஜம் இதை சொல்லும்போது தியேட்டர் இடிஞ்சுவிழறா மாதிரி கைதட்டலும் விசிலும் இருக்கும்.
‘நான் மட்டும் என்ன 'அண்ணா'? இனி இந்த நாடே உங்களை நம்பித்தான் ஆகவேண்டும்’
கவியரசு கண்ணதாசன் எழுதிய வசனம் , பாடல்கள் நிறையவே பின்நாட்களில் புவியரசு எம் ஜி ஆருக்கு உண்மையாகவே நடந்தது. அது போலவே இந்த வசனமும் பலித்துப் போனது, ஆம்1957ல் நாடோடி மன்னனுக்காக ராஜம் பேசிய வசனம் மக்கள் திலகம் 1977 முதலமைச்சராக பதவியேற்பு விழாவில் ராஜம் கலந்து கொண்டார் கூட்டத்திலிருந்த எம்.என்.ராஜத்தை விழா மேடையிலிருந்த மக்கள் திலகம் சைகை காட்டி அழைக்க மக்கள் திலகம் அருகில் அழைத்து வரப்பட்டார். உடனே புரட்சி தலைவர் பார்த்தாயா ராஜம் நீ சொன்னது பலித்துவிட்டதே என நாடோடி மன்னன் வசனத்தை நினைவூட்ட மனமகிழ்ச்சியில் நெகிழ்ந்து போனாராம் ராஜம் இன்றும் எம்.என்.ராஜம் பேட்டி வலைதள பதிவில் உள்ளது...


