TamilsGuide

கனடாவில் 46 மில்லியன் டொலர்கள் பரிசு வென்ற நபரைத் தேடும் லொட்டரி நிறுவனம்

கனடாவில் 46 மில்லியன் டொலர்கள் பரிசு வென்ற நபரை லொட்டரி நிறுவனம் ஒன்று தேடிக்கொண்டிருக்கிறது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் லொட்டரிச்சீட்டு வாங்கிய ஒருவருக்கு லொட்டரியில் 46 மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.

அந்த அதிர்ஷ்டசாலியை லொட்டரி நிறுவனம் தேடிக்கொண்டிருக்கிறது. 

அந்த நபர், குலுக்கல் நடந்த ஒரு ஆண்டுக்குள் தனது பரிசை பெற்றுக்கொள்ள முடியும்.

ஒரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், பிரிட்டிஷ் கொலம்பியாவில் இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக இவ்வளவு பெரிய தொகை ஒருவருக்கு பரிசாகக் கிடைக்க உள்ளது. 
 

Leave a comment

Comment