TamilsGuide

Avatar Fire And Ash திரைப்படம் 2 நாளில் செய்துள்ள தாறுமாறு வசூல்.... 

தமிழ் படங்களுடன் கடந்த டிசம்பர் 19ம் தேதி வெளியான ஒரு ஹாலிவுட் படம் தான் அவதார் ஃபயர் அண்ட் ஆஷ்.

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவான இப்படம் உலகளவில் 2டி, 3டி வடிவில் பல ஆயிரம் திரைகளில் வெளியானது.

இது அவதாரின் இறுதிப்பாகமாக இருக்கலாம் என்பதால் ரசிகர்கள் கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என்றிருக்கின்றனர். படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் காட்சியமைப்பிற்காகவே மக்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்த்துவரும் இந்த அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படம் நாளுக்கு நாள் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

முதல் நாளில் மொத்தமாக ரூ. 1000 கோடி வசூலித்த இப்படம் 2 நாளில் ரூ. 1800 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. வரும் நாட்களிலும் படத்திற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment