TamilsGuide

அனுராதபுரம் – காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் நாளை மீண்டும்

வடக்கு ரயில் பாதையில் காங்கேசன்துறைக்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் நாளை (22) மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களத்தின் தகவலின்படி, நாளை முதல் ‘யாழ் ராணி’ எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இந்த சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

அதன்படி, காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரத்திற்கும், அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறைக்கும் இடையிலான தினசரி ரயில் சேவைகளுக்கான அட்டவணைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
 

Leave a comment

Comment