ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேவால பகுதியில் கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட குறித்த சுற்றுலா பயணி, மீட்கப்படடு 1990 சுவ செரிய அம்பியூலன்ஸ் சேவை மூலமாக பலபிட்டிய வைத்யசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 54 வயதான பெலாரஸ் நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நேற்று மாலையில் நடந்த மற்றொரு சம்பவத்தில், ஹிக்கடுவ கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த 44 வயதான ரஷ்யப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் நீரோட்டத்தில் சிக்கிய நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
ஹிக்கடுவ காவல்துறை உயிர்காப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், குறித்த பெண்ணை மீட்டு முதலுதவி அளித்ததாகவும், அவர் ஆபத்தில் இருந்து மீண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


