TamilsGuide

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 4.2 பில்லியன் ரூபா நிதி உதவி

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ (Re building Sri lanka) திட்டத்திற்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து இலங்கையர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள்  4.2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை வழங்கியுள்ளதாக நிதி உதவி வழங்கியுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி  அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்காக திறைசேரி மொத்தம் ரூ.4,286 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளது.

இதில் ரூ.4,263 மில்லியன் வங்கிக் கணக்குகளில் நேரடி வைப்புத்தொகையாகவும் ரூ.23 மில்லியன் வெளிநாட்டு நாணயமாகவும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம், நலம் விரும்பிகள், தொழில்முனைவோர், அமைப்புகள், வணிகங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து பெறப்பட்ட ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

அத்துடள் இலங்கையின் மீள்கட்டமைப்பு முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி போன்ற பலதரப்பு நிறுவனங்கள் உதவி பெறுவதி குறித்து பரிசீலித்து வருவதாகவும், விவரங்கள் இறுதி செய்யப்பட்டவுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

Leave a comment

Comment