TamilsGuide

வெள்ளத்தில் மூழ்கியது களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் – கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு 

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயக்கல்வி அலுவலக பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் வெள்ள நீர் புகுந்துள்ளமையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு ள்ள நிலையில், நோய் தொற்றுகளால் மாணவர்கள் பாதிக்கும் அபாய நிலை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜிடம் , பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய வெள்ள நீரை வழிந்தோட செய்யும் வகையில், JCB இயந்திரம் மூலம் பாதுகாப்பாக தற்காலிக கால்வாய்களால் நீர் வடிந்தோடச்செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment