ரொம்ப வருசம் முன்னாடி என்னை பாக்க அவர் வந்தாரு
சினிமா
ரொம்ப வருசம் முன்னாடி என்னை பாக்க அவர் வந்தாரு. நீ யாருப்பா என்ன செஞ்சுக்கிட்டிருக்கேன்னு கேட்டேன். சினிமால நடிச்சுக்கிட்டிருக்கேன்னு சொன்னாரு. நான் சினிமாவெல்லாம் பாக்கறதில்லியேன்னு சொன்னேன்.
பரவாயில்லைம்மான்னு சொல்லிட்டு என் வீட்டைச் சுத்துமுத்தும் பாத்தாரு. இன்னிலேந்து எனக்கு நீங்க என் அம்மா மாதிரின்னு சொல்லி கையில ஒரு பெரிய தொகையை கொடுத்தாரு. நான் வேண்டாம்னு சொன்னேன் அதுக்கு அவரு உங்க பையன் உங்களுக்கு உதவி செய்ய கடமைப்பட்டவன் அதனால என்னை உங்க மகனா ஏத்துக்கங்கனு சொல்லி பண உதவி செஞ்சாரு.
அப்புறமா கவர்மென்டில சொல்லி எனக்கு மாசாமாசம் பென்சன் கிடைக்கவும் ஏற்பாடு செய்தாரு. இப்ப அவரு காலமாயிட்டாரு. ஆனா நான் காலமாற வரையிலும் அவர் ஏற்பாடு செஞ்சு தந்த பென்சனை நான் வாங்கப் போறேன்.
அப்பா அம்மாவை பொருளாதார சிரமம் இல்லாம பாத்துக்கறவன் தானே பிள்ளை? அப்படிப் பாத்தா எம்.ஜி.ஆர்.தான் எனக்குப் பிள்ளை! என் பிள்ளை போயிட்டானே!”
என்று கண்கலங்கி முந்தானையால் தன் விழிகளைத் துடைத்துக் கொண்டு கூறினார் அந்த மூதாட்டி!
1987ல் எம்ஜிஆர் மறைந்தபோது இப்படி கூறியவர் சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த திருப்பூர் குமரனின் மனைவி ராமாயி அம்மாள் அந்த மகன் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்! (தற்போது இந்த அம்மையார் உள்ளாரா என்பது தெரியவில்லை)
விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் மீது அளப்பரிய மதிப்பும் அன்பும் கொண்டவராக தனது வாழ்நாள் முழுவதும் இருந்த எம்ஜிஆரின் தேசபக்தி போற்றத்தக்கது! இராம ஸ்ரீநிவாஸன்























