TamilsGuide

அரசன் படத்தில் வடசென்னை சந்திரா கதாபாத்திரம் - ஆண்ட்ரியா பகிர்ந்த புகைப்படம் வைரல்

நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். அனிருத் இசையமைக்க உள்ள இப்படம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாக உள்ளது.

'அரசன்' படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராமில் வடசென்னை படத்தில் நடித்த சந்திரா கதாபாத்திர புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதன்மூலம் அரசன் படத்தில் சந்திராவாக ஆண்ட்ரியா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
 

Leave a comment

Comment