போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (14) யூத திருவிழாவை குறிவைத்து நடந்த கொடிய துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக தனது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறியுள்ளார்.
சிட்னியின் போண்டி (Bondi) கடற்கரையில் நடந்த ஹனுக்கா நிகழ்வில் இரண்டு துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலின் விளைவாக 15 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தாக்குதல் தொடர்பில் கான்பெராவில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அல்பானீஸ்,
வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாத கருத்துக்கள் பரப்புவர்களை புதிய சட்டங்கள் குறிவைக்கும்.
வெறுப்பைப் பேச்சை பரப்புபவர்களுக்கான விசாக்களை இரத்து செய்ய அல்லது மறுக்க உள்துறை அமைச்சருக்கு புதிய அதிகாரங்கள் வழங்கப்படும் என்றார்.
மேலும், ஒவ்வொரு யூத அவுஸ்திரேலியருக்கும் நமது மகத்தான தேசத்திற்கு அவர்கள் செய்யும் பங்களிப்புக்காக பாதுகாப்பாகவும், மதிப்புமிக்கதாகவும், மதிக்கப்படுவதாகவும் உணர உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.


