TamilsGuide

கனடா முழுவதும் கடும் குளிர்கால வானிலை - பனிப்புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை

கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர்கால வானிலை எச்சரிக்கைகள் அமலில் உள்ளதாக கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அட்லாண்டிக் கனடாவைத் தவிர, அனைத்து மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்கும் வானிலை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய கனடா பகுதிகளை நோக்கி நகரும் அபாயகரமான வானிலை அமைப்பின் காரணமாக, ப்ரெய்ரி மாகாணங்களில் 30 செ.மீ. வரை பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தெற்கு சஸ்கட்ச்வான் மற்றும் மானிடோபா பகுதிகளில் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இங்கு பலத்த காற்றுடன் 20 செ.மீ. வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

“பலமான ‘அல்பெர்டா கிளிப்பர்’ வானிலை அமைப்பு, தெற்கு சாஸ்கச்சுவான் மற்றும் மனிடோபா பகுதிகளில் கனமழை போன்ற பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றை ஏற்படுத்தி, புதன்கிழமை காலை முதல் பனிப்புயல் நிலையை உருவாக்கும்,” என கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு மாகாணங்களின் சில பகுதிகளில், பனிப்பொழிவு தொடங்குவதற்கு முன் உறைமழை (freezing rain) பெய்யும் வாய்ப்பும் இருப்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

“சில இடங்களில் வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கு மேல் இருப்பதால், அங்கு மழை மட்டுமே பெய்யக்கூடும்,” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment