வணிகப் பதற்றம், சுங்கவரி (Tariffs) மற்றும் பொருளாதார காரணங்களால் அமெரிக்காவுக்கு செல்லும் பயணங்களை பல கனடியர்கள் தொடர்ந்து தவிர்த்து வருகின்றனர்.
இருப்பினும், மொத்த வெளிநாட்டு பயணங்களில் கனடியர்களின் ஆர்வம் குறையவில்லை; மாறாக, அமெரிக்காவைத் தவிர்ந்த பிற நாடுகளுக்கான பயணங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன என சுற்றுலா நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கரீபியன் தீவுகள், ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு செல்லும் கனடியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும், பலர் நீண்ட காலம் தங்கும் வகையில், தெலைவான நாடுகளையும் தேர்வு செய்து வருகின்றனர். 2025ஆம் ஆண்டில் அமெரிக்கா நோக்கிய கனடியர்களின் பயணம் ஆண்டு அடிப்படையில் சுமார் 40% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவுக்கு செல்லும் பயணங்கள் கணிசமாக குறைந்துள்ளன.
அதற்கு பதிலாக, ஐரோப்பா மற்றும் தெற்கு பகுதிகளுக்கு கனடியர்கள் அதிகமாக பயணம் செய்கிறார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


