TamilsGuide

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த எஸ்.எஸ்.ராஜமௌலி

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார் தி வே ஆப் வாட்டர்' என்ற திரைப்படம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 16- ந் தேதி வெளியாகி வசூலில் சாதனை படைத்தது

இந்நிலையில், அவதார் படத்தின் 3வது பாகமான ' Avatar: Fire and Ash' படம் நாளை மறுநாள் ( டிசம்பர் 19) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அவதார் 3 பாகத்தை இந்தியாவில் ப்ரோமோஷன் செய்யும் வகையில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு ஜேம்ஸ் கேமரூன் சிறப்பு வீடியோ நேர்காணல் கொடுத்துள்ளார். அதில், அவதார் படத்தை பற்றியும் அவர் பேசியுள்ளார். குறிப்பாக ராஜமௌலியின் அடுத்த படமான வாரணாசி படம் குறித்து கேட்டறிந்த ஜேம்ஸ் கேமரூன், அப்படத்தில் புலிகளை வைத்து ஏதேனும் காட்சிகள் படமாக்கப்பட்டால் என்னை கூப்பிடுங்கள் நான் வருகிறேன் என்று ஜாலியாக தெரிவித்தார்.
 

Leave a comment

Comment