TamilsGuide

கனடாவில் நாயை களவாடிய பெண்ணுக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை

கனடாவில் நாய் ஒன்றை களவாடிய பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில், அண்டை வீட்டாரின் நாயை “வன்முறையுடன் கூட்டாக தாக்கி” களவாடிய சம்பவத்தில் ஒரு பெண் கொள்ளை குற்றத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படவில்லை என அண்மையில் வெளியான நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷய்னி கிறிஸ்டி அன்டோனியோஸ் என்பவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜூரி விசாரணையில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

தண்டனை தொடர்பான தீர்ப்பு கடந்த வாரம் இணையத்தில் வெளியிடப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மொனிக்கா கிளைட்டன் என்ற பணெ் நாயுடன் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் மூன்று பெண்கள் அணுகி, தாக்கி, தள்ளி, உதைத்து, நாயை வலுக்கட்டாயமாக கொள்ளயைிட்டுச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டது.

நாயை களவாடிய பெண்ணுக்கு 846 டொலர்களை செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

Leave a comment

Comment