2021 ஜனவரியில் தான் பேசிய உரையை தவறாக திரித்து வெளியிட்ட BBC செய்தி நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரூ.90,000 கோடி இழப்பீடு கேட்டு புளோரிடா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
டிரம்பின் பேச்சை எடிட் செய்து வெளியிட்டதாக எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்திகள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
இது தொடர்பாக ஏற்கனவே ட்ரம்பிடம் மன்னிப்புக் கேட்டு BBC நிறுவனம் கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


