சுமார் 2.85 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்த முயன்றபோது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணிகளிடம் அறிவிக்க எந்தப் பொருட்களும் இல்லாத “கிரீன் சேனல்” வழியாக சந்தேக நபர் விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் திவுலப்பிட்டியவைச் சேர்ந்த 58 வயதுடைய தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் டுபாயில் இருந்து இன்று அதிகாலை 12:50 மணிக்கு தரையிறங்கிய விமானத்தில் வந்திருந்தார்.
சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவரிடம் இருந்து 19,000 வெளிநாட்டு சிகரெட் குச்சிகள் அடங்கிய 95 அட்டைப் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


