சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'பராசக்தி' படம், அடுத்தாண்டு (2026) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.
இதற்கிடையில் பல ஆண்டுகளுக்கு முன்பு மெட்ராசில் நடைபெற்ற ஒரு உரிமை மறுப்பு போராட்டத்தில், கிளர்ச்சியாளர்களை ஒழிக்க ஒரு அதிகாரி வருகிறார். ஆனால் அவரது சகோதரர் தான் போராட்டத்துக்கு மூலகாரணமாக இருக்கிறார். இறுதியில் பாசமா? நீதியா? என்ற சூழலில் நாயகன் எடுக்கும் முடிவு தான் 'பராசக்தி' படத்தின் கதை என்ற தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதனால் 'பராசக்தி' படத்தின் வெளியீட்டை நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.
இந்த நிலையில், 'பராசக்தி' படத்தில் வரும் காட்சிகளை கொண்ட 10 நிமிட வீடியோவை வருகிற 18-ந்தேதி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் வெளியிட உள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இது சினிமா வரலாற்றில் முதன்முறையாக நடைபெற உள்ள நிகழ்வு என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.
படக்குழு வெளியிட்ட வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


