போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் மற்றொரு பகுதியாக லத்தீன் அமெரிக்காவில் தரைப்படை தாக்குதல்களை தொடங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நீர் வழியாக வரும் 96 சதவீத போதைப்பொருட்களை நாங்கள் முறியடித்தோம், இப்போது நாங்கள் நிலம் வழியாக தாக்குதல்களை தொடங்குகிறோம்.
நிலம் வழியாகச் செல்வது மிகவும் எளிதானது, அது நடக்கப்போகிறது. நமது நாட்டிற்கு போதைப்பொருட்களைக் கொண்டு வருபவர்கள் இலக்குவைக்கப்படுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தென் அமெரிக்காவின் கடற்கரையில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது பென்டகன் தொடர்ச்சியான தாக்குதல்களைத் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த முயற்சியை விரிவுபடுத்த அமெரிக்க ஜனாதிபதி பல நாட்களாக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.


