• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வரம் கேட்ட உடன் கொடுக்கின்ற கடவுள் பொன்மனச்செம்மல்...

சினிமா

ஐயா பக்தவச்சலம் மறைவுக்கு பின் அவருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது...அப்போது நடை முறைப்படி சென்னை நகர செரீப் ஆக அப்போது இருந்த ஏ.வி.எம்.சரவணன் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்வில் புரட்சித் தலைவர் கலந்து கொண்டார்.
அமைச்சர் பெருமக்கள் முக்கிய பிரமுகர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில பத்திரிகை ராமானுஜம் அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு இருந்தார்.
நிகழ்ச்சி நடுவில் அவர் ஒரு செய்தியை தலைவருக்கு சொல்ல சொல்லி ஏ.வி.எம். அவர்களிடம் சொல்ல அவரும் தலைவர் அவர்களிடம்
ராமானுஜம் அவர்கள் வீட்டில் பணி புரியும் ஒரு ஏழை பெண்ணுக்கு உயர் சிகிச்சை மேற் கொள்ள அதிகம் பணம் தேவைபடுகிறது.
அதற்கு என்று நாங்கள் முக்கிய நண்பர்களிடம் ஒரு பெரிய தொகையை வசூல் செய்து வைத்து உள்ளோம்...
இன்னும் கொஞ்சம் பணம் சேர்ந்தால் சிகிச்சை செலவு இலக்கை எட்டி விடுவோம் என்று சொல்ல.
தலைவர் மொத்தம் எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்க அவர்கள் மொத்த செலவு தொகை சொல்லி எங்களுக்கு இப்போ வசூல் ஆன தொகை போக மீதி இவ்வளவு போதும் என்று சொல்ல.
மன்னவர் மாணிக்கத்தை அழைத்து காதில் ஏதோ சொல்ல உடன் 2 நிமிடங்களில் தலைவர் காரில் இருந்து ஒரு பண்டில் செய்யப்பட்ட தொகை உடன் அவர் வர...
தலைவர் அவர்கள் இருவரிடமும் அந்த தொகையை கொடுக்க அண்ணே என்ன இது நாங்க இவ்வளவு கேட்கவில்லை என்று சொல்ல.
தலைவர் நீங்கள் குறிப்பிட்ட அந்த ஏழை பெண்ணின் சிகிச்சை மொத்த பணமும் இதில் இருக்கு...வைத்து கொள்ளுங்கள் என்று சொல்ல.
அவர்கள் அப்போ நாங்க வசூல் செய்த பணத்தை என்ன செய்வது என்று கேட்க
சிகிச்சைக்கு பிறகு அந்த ஏழை பெண்ணின் செலவுக்கு அவர் யாரிடம் போவார் அதற்கு உங்கள் நிதி உதவட்டுமே என்று சொல்ல..
ஒரு நிமிடம் வாய் அடைத்து போகிறார்கள் அந்த முக்கிய பிரமுகர்கள்.
உதவி செய்ய நினைத்து விட்டால் அது கல்யாண வீடாக இருந்தாலும் சரி அல்லது அஞ்சலி செலுத்த வந்த இடம் ஆக இருந்தாலும் வரம் கேட்ட உடன் கொடுக்கின்ற கடவுள் பொன்மனச்செம்மல் இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
வாழ்க! பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் புகழ்.🙏🙏🙏

Devaraj Andrews

Leave a Reply