TamilsGuide

அவுஸ்திரேலிய தாக்குதலுக்கு கனடிய பிரதமர் கண்டனம்

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தாக்குதலுக்கு கனடிய பிரதமர் மார்க் கார்னி கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் தன்னை “மிகவும் அதிர்ச்சியடையச் செய்தது” என குறிப்பிட்டுள்ளார்.

துக்கத்தின் இந்த தருணத்தில் கனடா, ஆஸ்திரேலிய மக்களுடனும் உலகெங்கிலும் உள்ள யூத சமூகத்துடனும் உறுதியாக நிற்கிறது என தெரிவித்துள்ளார்.

தீவிரவாதம், வன்முறை, வெறுப்பு மற்றும் அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹனுக்கா என்பது இருளுக்கிடையே ஒளியை நினைவூட்டும் பண்டிகை என்றும், யூத சமூகத்தின் உறுதியை  நினைவுகூரும் காலம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த உறுதியை பாதுகாத்து, யூத சமூகங்கள் பாதுகாப்பாகவும் வளர்ச்சியுடனும் வாழ அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கார்னி வலியுறுத்தினார்.

யூத சமூகத்தின் உறுதி பல நூற்றாண்டுகளாக சோதிக்கப்பட்டு வந்துள்ளது; துரதிருஷ்டவசமாக, சமீப ஆண்டுகளில் கனடாவிலும் அது தொடர்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

Leave a comment

Comment