தாலாட்டு பாடல் தான், ஆனா ஏன் கண்ணீர் வருதுனு தெரியல... இளையராஜாவுக்கே விடை தெரியாத கமல்ஹாசன் பாடல்!
சினிமா
கமல்ஹாசன் பாடல் கேட்டால் ஏன் கண்ணீர் வருகிறது என்பது குறித்து இளையராஜா பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் ரஜினி, கமல் முதல் தற்போதைய தலைமுறை நடிகர்களுக்கு வரை இசையமைத்துள்ளார். சினிமாத் துறையில் இளையராஜாவிற்கு மறுபெயர் என்னவென்று கேட்டால் வியப்பு என்று தான் பலரும் பதிலளிப்பார்கள். தன் இசைத் திறமையால் இயக்குனர்கள், மக்கள் என அனைவரையும் வியப்படைய செய்தவர் இளையராஜா. தமிழ் திரையுலகில் இசையில் இளையராஜா பல சாதனைகளை செய்துள்ளார்.
இவர் பாடல்கள் பல இன்னும் ரசிகர்களுக்கு கண்ணீரை வரவழைக்கும் பாடலாக உள்ளது. அதாவது இவரது குரலும், இசையும் மக்களின் மனதில் உள்ள ஆன்மாவை தட்டி எழுப்புவதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘நாயகன்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘தென் பாண்டி சீமையிலே’ பாடலும் அந்த வரிசையில் இடம்பெற்ற ஒரு பாடலாகும். இந்த பாடலை எப்போது கேட்டாலும் கண்களில் இருந்து கண்ணீர் சிந்தும்.
இந்த பாட்டை கேட்டு அழாத ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம். அப்படி இந்த பாடல் பலரது கண்களில் கண்ணீரை வரவழைக்கும் பாடலாகும். இந்நிலையில், ’தென் பாண்டி சீமையிலே பாடல் கேட்டால் ஏன் கண்ணீர் வருகிறது என்று எனக்கே தெரியவில்லை என இளையராஜா தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, “தென்பாண்டி சீமையிலே பாடலில் உண்மையான ஆன்மாவை போய் தொடும் எதோ ஒரு விஷயம் இருக்கிறது. அது என்ன என்று தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணர்வு இருக்கும். புதுசாக ஒரு கிராமத்தில் இருந்து ஒருவர் என்னை பார்க்க வந்தார்.
என்னை பார்த்ததும் அவருக்கு கண்ணீர் கொட்டியது. அப்போது அந்நபர் உங்கள் பாட்ட கேட்டால் தான் கண்ணீர் கொட்டுகிறது என்றால் உங்களை பார்க்கும் போதும் கண்ணீர் கொட்டுகிறது என்றார். கண்ணீர் வந்தால் மனம் சுத்தமாகுகிறது என்று அர்த்தம். கண்ணீர் தான் நம் மனதை சுத்தப்படுத்தும் உண்மையான நீர். மனதில் இருக்கும் அழுக்கை கழுவுவது கண்ணீர் தான்” என்றார். ‘நாயக்ன்’ திரைப்படம் கமல் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய திரைப்படமாகும். இந்த படம் கமல்ஹாசனின் வாழ்க்கையை மாற்றியது என்று கூறலாம்.
தேன்மொழி





















