• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு

இலங்கை

நாட்டில் டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.

இந்த உதவி பொருட்கள் அடங்கிய பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் இன்று (13) கையளிக்கப்பட்டன.

இதேவேளை, சிறைச்சாலை கைதிகள் தங்களது ஒரு நேர உணவுக்கான பொருட்களையும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களையும் உள்ளடக்கிய 180 பொதிகள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலை அத்தியட்சகர் சீ.இந்திரகுமார், பிரதான ஜெயிலர், ஏனைய ஜெயிலர்கள், புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து இந்த உதவிகளை கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply