TamilsGuide

நான் சட்டை இல்லாம சண்டை போடணும், வாய்விட்டு கேட்ட ரஜினி; கிண்டல் செய்த கே.எஸ்.ரவிகுமார் - சட்டை கழற்றி ஷாக் கொடுத்த ரஜினி

காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட், காமெடி என அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்த இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில், ரஜினிகாந்த் உடம்பில் சட்டை இல்லாமல் ஒரு ஃபைட் சீனில் நடித்திருப்பார்.

ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தின் க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் அவர் சட்டை இல்லால், ஃபைட்டர்களை பறக்கவிட்டீருப்பார். இந்த காட்சி நடிப்பதற்கு ஐடியா கொடுத்ததே ரஜினிகாந்த் தான். இது குறித்து அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் தான் படையப்பா. சிவாஜி கணேசன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில், ரஜினிகாந்த், மறைந்த நடிகை சௌந்தர்யா, வில்லியாக ரம்யா கிருஷ்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, லட்சுமி, ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

படத்தின் தொடக்கத்தில், வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு வரும் ரஜினிகாந்த், தனது அப்பா சிவாஜி இறந்தவுடன், அவர் வாங்கி வைத்த இடத்திற்கு சென்றுவிடுவார். இடையில் மாமன் மகள் காதலை நிராகரிப்பது, அதே வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் சௌந்தர்யாவை காதலிப்பது என ஜாலியாக படம் சென்றுகொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் தனது காதலியை கரம் பிடிக்கும் ரஜினிகாந்த், பெரிய பணக்காரராக ஆகிவிடும் நிலையில், 2 மகள்களுக்கு அப்பாவாக ஆகிவிடுவார்.

காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட், காமெடி என அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்த இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில், ரஜினிகாந்த் உடம்பில் சட்டை இல்லாமல் ஒரு ஃபைட் சீனில் நடித்திருப்பார். இந்த சீன் ஷூட் செய்வதற்கு முன், ரஜினி கே.எஸ்.ரவிக்குமாரிடம் சென்று, நான் ஃபேர் பாடியுடன் ஒரு சண்டைக்காட்சியில் நடிக்கட்டுமா என்று கேட்டுள்ளார். இதை கேட்ட அவர் நீங்க ஃபேர் பாடி சண்டையா? சும்மா இருங்க விளையாடாதீங்க சார் என்று கூறியுள்ளார். அதன்பிறகு ரஜினிகாந்த் தனது சட்டையை கழற்றி காட்டியுள்ளார்.

அவரின் உடம்பை பார்த்து மிரண்டுபோன கே.எஸ்.ரவிக்குமார் கண்டிப்பா பண்ணலாம் சார் என்று சொல்லி, சண்டை இயக்குனர் கனல் கண்ணனிடம் கூறியுள்ளார். அவரும் இதை கேட்டு, சார் நீங்க இப்படி இருக்கீங்க, இதில் ஃபேர் பாடி சண்டை எப்படி சார் என்று கேட்க, கே.எஸ்.ரவிக்குமார் சார் நீங்க சட்டையை கழற்றி காட்டுங்க என்று கூறியுள்ளார். அப்போது ரஜினி சண்டையை கழற்றி காட்ட, இவரும் ஆச்சரியமாகி, சார் எப்படி சார் இப்படி என்று கேட்டுள்ளார். அதன்பிறகு இந்த சண்டைக்காட்சி படாக்கப்பட்டது என ரஜினிகாந்த் கூறியுள்ளார். இந்த சண்டை படத்தில் பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தேன்மொழி

Leave a comment

Comment