எல்லை மோதலுக்கு மத்தியில் கலைக்கப்பட்ட தாய்லாந்து நாடாளுமன்றம்
நம்பிக்கையில்லாத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து பிரதமர் அனுடின் சான்விரகுல் அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.
அதன்படி, 45-60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தாய்லாந்து பிரதமர், கம்போடியாவுடனான எல்லை மோதல்களுக்கு நாடாளுமன்றத்தைக் கலைப்பதே மிகவும் பொருத்தமான தீர்வு என்று கூறியுள்ளார்.
இருப்பினும், தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமையைத் தொடர்ந்து, தாய்லாந்து பிரதமர் அனுடினும் அவரது கட்சியும் பொதுமக்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.























