'டாடா' பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடித்துள்ள படம் 'கராத்தே பாபு'. ரவி மோகனின் 34-வது படமான இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரித்துள்ளது.
இப்படத்தில் தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக நடித்திக்கிறார். இப்படத்தின் மூலம் தவ்தி ஜிவால் நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.
மேலும் இப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நாசர், விடிவி கணேஷ், ந சக்தி வாசுதேவன், காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். அரசியல் கதைகளத்துடன் கூடிய இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், 'கராத்தே பாபு' திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக சிறப்பு வீடியோ வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது.


