TamilsGuide

ஏழை முட்டாளே, தொலைந்து போ - முன்னாள் ஜனாதிபதிக்கு திருப்பிக்கொடுத்த பெண்கள்

பரிஸின் 16ஆம் வட்டாரத்தில் நடைபெற்ற பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்கோசியின் புத்தகம் கையொப்பமிடும் நிகழ்வை இரண்டு பெண்ணிய செயற்பாட்டாளர்கள் குலைத்ததையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிகழ்வு புதன்கிழமை பரிஸின் 16ஆம் வட்டாரத்தில் உள்ள ஒரு புத்தக நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

ஏழை முட்டாளே, தொலைந்து போ; முன்னாள் ஜனாதிபதிக்கு திருப்பிக்கொடுத்த பெண்கள் | Woman Arrested Disturbance Over Sarkozy Book Event

அதேவேளை 2008 பிப்ரவரியில் விவசாய கண்காட்சியில் ஒரு பார்வையாளரிடம் நிக்கோலா சார்கோசி தானே பயன்படுத்திய அந்த கேலிச் சொற்றொடரைக் குறிப்பிட்டு, "casse toi pauv' con ! (ஏழை முட்டாளே, தொலைந்து போ) என்று முழங்கி கையொப்ப நிகழ்வை குலைத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி தனது "Le Journal d'un prisonnier" (ஒரு கைதியின் நாட்குறிப்பு) புத்தகத்தில், லிபிய வழக்கில் தண்டனை பெற்ற பிறகு Santé சிறையில் அக்டோபர் 21 முதல் நவம்பர் 10 வரை கழித்த மூன்று வாரங்களின் அனுபவங்களை விவரித்துள்ளார்.
 

Leave a comment

Comment