TamilsGuide

யுனிசெஃப் பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு

யுனிசெஃப் பிரதிநிதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடலானது நேற்று (10) கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

புதிய கல்வி சீர்திருத்தங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மற்றும் கல்வி நிர்வாகம், பாடத்திட்டம், ஆசிரியர் பயிற்சி மற்றும் அனைத்துப் பாடசாலைகளையும் ஒருங்கிணைப்பு போன்ற பகுதிகளை உள்ளடக்கிய விரிவான டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையை உருவாக்குவது குறித்து இந்தக் கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.
 

Leave a comment

Comment